Tuesday, October 11, 2016

வலைப்பதிவர் கவீதா காலமானார்!

கவிஞர் கவீதா எனது நண்பர், தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். 

பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். 

2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. 

கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை... 


வலைப்பதிவர் கவீதா காலமானார்! 
https://skaveetha.blogspot.com/2016/10/valaippathivar-kaveethaa-kaalamaanaar.html

Saturday, October 08, 2016

நாகேஷ் 25

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்! 

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா! 


நாகேஷ் 25 
https://manaththooralgal.blogspot.com/2016/10/nakesh-25.html

Wednesday, July 27, 2016

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01

விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... 

சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. 

பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. 

வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் புதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண  செய்ய வேண்டுகிறேன்.                        


விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01 
https://sigarambharathi.blogspot.com/2016/11/viralvel-veeranukkor-madal-01.html

Friday, September 12, 2014

கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். 

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. 

கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை, ”பைத்தியங்கள் உலவப்போகின்றன!” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல். 


கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு 
https://manaththooralgal.blogspot.com/2014/09/kavidhai-ulagin-sooriyan-bhaarathi-ninaivu-naal-sirappup-pagirvu.html

Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.


திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்! 
https://manaththooralgal.blogspot.com/2014/08/thindukkal-ai-liyoniyin-nermugam.html

Friday, August 01, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

முன்னைய பதிவு : அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

நன்றி : நக்கீரன் 
               01.09.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 02 

 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/08/siragugalillaadha-paravai-kavikko-abdhul-rahuman.html

Tuesday, July 29, 2014

கடிகாரம்

மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய்... 


கடிகாரம் 
https://skaveetha.blogspot.com/2014/07/kadigaaram.html

Wednesday, July 23, 2014

மூடாத செவிகள்

செவி மூடாத
என் சிநேகிதனை 
தாமதமாகித்தான் 
நான் 
அறிந்து கொண்டேன்... 


மூடாத செவிகள் 
https://skaveetha.blogspot.com/2014/07/moodaatha-sevigal.html

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
இணைப்பு : அழகை ஆராதிப்போம் - 01
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 


அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான் 
https://manaththooralgal.blogspot.com/2014/07/azhage-aandavan-kavikko-abdul-rahumaan.html

Sunday, July 06, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி

கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். 

இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. 

கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. 


அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி 
https://manaththooralgal.blogspot.com/2014/07/ariyaadha-vayadhin-adhirchchigal-kaviyarasu-vairamuththuvin-naruk-petti.html