ஈழத்துக் கலைஞர்களின் 3 வருட உழைப்பின் மூலம் திரைக்கு வரும் "உம்மாண்டி" முழு நீளத் திரைப்படம்... எதிர்வரும் (அக்டோபர்) 28, 29 ம் திகதிகளில் ராஜா 2 திரையரங்கிலும் அதற்கடுத்த மாதங்களில் இலங்கை மற்றும் தமிழர் வாழும் சர்வதேச நாடுகளின் திரையரங்கிலும் கண்டு களிக்கலாம்.
1996 இல் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து சக்கை போடு போட்ட 'இந்தியன்' திரைப்படத்தை நாம் அவ்வளவு இலகுவாக மறந்திருக்க மாட்டோம்.
இப்போது 'இந்தியன் 2' வெளிவரவுள்ளது. 2018 அல்லது 2019 இல் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள அதே நேரம் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.