Sunday, September 30, 2018

மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம்

மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம் 

மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம் 
https://cinemasigaram.blogspot.com/2018/09/Chekka-Chivantha-Vaanam-public-review-at-twitter.html 
#CCV #ChekkaChivanthaVaanam #STR #Simbu #VijaySethupathy #ArunVijay #ARRahman #ManiRatnam #AravindSwami #CCVReview #LycaProductions #Vairamuthu #SonyMusic #SIGARAM 

Saturday, September 29, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 07 

முடிமீட்ட மூவேந்தர்கள்

பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. 

அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது. 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-07.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

Monday, September 24, 2018

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 - வாக்களிப்பு | Zee Tamil Kudumba Viruthukal 2018 - Voting

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 - வாக்களிப்பு | Zee Tamil Kudumba Viruthukal 2018 - Voting 

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2018ஆம் ஆண்டுக்கான குடும்ப விருதுக்கான போட்டியாளர்களின் பெயர்ப்பட்டியலை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. உங்கள் விருப்பப் போட்டியாளருக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வாக்களிக்கலாம். 

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018 - வாக்களிப்பு | Zee Tamil Kudumba Viruthukal 2018 - Voting 
https://sigaram9.blogspot.com/2018/09/Zee-Tamil-Kudumba-Viruthukal-2018.html

Wednesday, September 19, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு

அத்தியாயம் - 02 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 

'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன். 

Post Date 12/07/2012 | Edit date 19/09/2018 

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு 
https://sigaram-one.blogspot.com/2018/09/kalyaana-vaibogam-episode2-edition1.html 
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Tuesday, September 18, 2018

இந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி!

இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்கு மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் குறித்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியுள்ளது. தகவலறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருகிறது. 

இந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி!
https://sigaram2.blogspot.com/2018/09/rape-crime-against-school-student.html

இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு

கே. பாக்கியராஜ் தலைமையிலான பட்டிமன்றம், தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா சிறப்பு நூல் வெளியீடு, இந்திய நடிகர்களுக்கான எம்.ஜி.ஆர் விருது வழங்கும் நிகழ்வு ஆகியன விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். எம்.ஜி.ஆரின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டதுடன் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு 
https://sigaram2.blogspot.com/2018/09/mgr-102nd-birthday-memorial-event-at-kandy-srilanka-16-09-2018.html

Saturday, September 15, 2018

அவள் | சிறுகதை | கதிரவன்

மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது. 

கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. 

இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

அவள் | சிறுகதை | கதிரவன் 
https://sigaram-one.blogspot.com/2018/09/aval-kathiravan.html 
சிறுகதை | தமிழ் | வலைத்தளம் | அன்பு | காதல் | அம்மா | காதலி | கணவன் | குடும்பம் | இல்லறம் | தாம்பத்தியம் | உறவுகள் | பிரிவு | கதிரவன் | சிகரம் 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 06 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 06 

முடிமீட்ட மூவேந்தர்கள்

அரசரின் வார்த்தையிலிருந்த உண்மை விளங்கித் தன்னுடைய பிழையை உணர்ந்த இளவரசர், அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து மனக் குழப்பத்துடன் தன் அறையை நோக்கி விரைந்தார். வீரர்கள் உடன் வருவதையும் மறந்து அறைக்குச் சென்று மேஜையின் மீதிருந்த ஓலையில் தளபதிகளை உடனடியாகக் கிளம்பி வருமாறு தன் கைப்பட எழுதி, தன்னுடைய முத்திரையிட்டுத் திரும்பினார். அறையின் வாயிலில் வேல் பிடித்த வீரர் நின்றிருந்தார். அவரை அருகில் அழைத்து "இதை நம் பாசறையிலிருக்கும் தளபதிகளிடம் உடனே சேர்ப்பித்து விடுங்கள். தாமதம் வேண்டாம்" என்று உத்தரவு பிறப்பித்த மறுகணம் கிளம்பினார் வீரர். 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 06 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-06.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு

தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதை என்னவோ பண்ணியது.

"ஜெய்..." - நண்பன் சுசியின் அழைப்புக் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது. பதிலேதும் சொல்லாமல் நிமிர்ந்து 'என்ன' என்பது போல அவன் முகத்தைப் பார்த்தேன்.

"வாழ்த்துக்கள்டா மாப்ள..."

"என்ன சுசி நீயும்.....?" 

Post Date 05/07/2012 | Edit date 15/09/2018 

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு 
https://sigaram-one.blogspot.com/2018/09/kalyaana-vaibogam-episode1-edition1.html 
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Friday, September 14, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 05 

முடிமீட்ட மூவேந்தர்கள்

கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள். 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-05.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி

அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான்.

ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி 
https://sigaram-one.blogspot.com/2018/09/gnabagangal-chapter-02.html 
#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம் 

List of Tamil TV Channels in Dish tv d2h as at 14.09.2018

List of Tamil TV Channels in Dish tv d2h as at 14.09.2018 

1802 - Sun TV 
1804 - Zee Tamil 
1806 - Vijay TV 
1808 - Colors Tamil 
1809 - Siripoli 
1813 - Jaya TV 
1815 - Kalaignar 
1817 - Raj TV 
1819 - Raj Digital Plus 
1821 - Captain TV 
1823 - Adithya 
1825 - Mega TV 

List of Tamil TV Channels in Dish tv d2h as at 14.09.2018
https://sigaram9.blogspot.com/2018/09/list-of-tamil-tv-channels-in-dish-tv.html

Thursday, September 13, 2018

இலங்கை | எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருட்களின் விலைகள் சீராக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 10.09.2018 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் சீராக்கப்பட்டுள்ளன. 

இலங்கை | எரிபொருள் விலை அதிகரிப்பு
https://sigaram4.blogspot.com/2018/09/fuel-price-hike-sri-lanka-sept-2018.html

இலங்கைக்கு 160 புகையிரதங்களை இந்தியா வழங்கும்

இலங்கை அரசாங்கத்துக்கு 160 புகையிரதங்களை இந்தியா தயாரித்து வழங்கவுள்ளது. இதற்காக 82 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியிலான ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு 160 புகையிரதங்களை இந்தியா வழங்கும் 
https://sigaram4.blogspot.com/2018/09/railway-agreement-with-india.html

Dell Inspiron 14 | 2 in 1 Chromebook | தொழிநுட்பப் பார்வை

கூகுளின் குரோம் இயங்குதளத்தில் இயங்கும் கணினிகள் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகின. 

HP, Dell மற்றும் Acer ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் சில மடிக்கணினிகளை கூகுள் வெளியிட்டது. 

Dell Inspiron 14 | 2 in 1 Chromebook | தொழிநுட்பப் பார்வை 
https://sigaram5.blogspot.com/2018/09/dell-inspiron-14-2-in-1-chromebook.html

Wednesday, September 12, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 04 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 04

அந்தி சாய்ந்து ஆதவன் மறையும் மாலை நேரம். பொன்னிறக் கதிர் எங்கும் பரவி மங்களகரமாய்க் காட்சிளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளவரசர் அவரின் மெய்க்காவல் வீரர்களுடன் புயலெனப் புரவியில் பாசறையைச் சென்றடைந்தார். வாயிலில் எக்காளம் அடித்து இளவரசரின் வருகை தெரிவிக்கப்பட்டது. முன்புறத்தில் நின்றிருந்த உபதளபதிகளும் வீரர்களும் நேராய் வரிசையாய் நின்றார்கள். வீரர்கள் இமைகள் கூட இமைக்காமல் நேராய் நிமிர்ந்து நின்றிருந்தார்கள். அறையிலிருந்த தளபதிகள் அவ்விடம் வந்து வரிசையாய் நின்றார்கள். குதிரையை விட்டுக் குதித்து இறங்கியவர் வீரர்கள் நின்றிருந்த இடம் நோக்கி விரைந்தார். வீரர்கள் வாளையும் வேலையும் நிலத்திலூன்றி மண்டியிட்டு இளவரசருக்கு வணக்கத்தைக் கூறினர். வீரர்களின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கமளித்தார். தளபதிகள் வந்து அவரை அறையை நோக்கி அழைத்துச் சென்றார்கள். 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 04 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-04.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

பயணம் - 03 

"நமது ஒற்றர்களின் தகவல் வந்ததும் நாம் கிளம்ப வேண்டும். ஒற்றர்களிடமிருந்து தகவல் வரும் வரை வீரர்களுக்கு முழுமையான தகவலைத் தெரிவிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் கிளம்ப வேண்டியிருக்கும் என்று மட்டும் கூறுங்கள். அவர்களே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். படைக்கு வீரர்கள் பற்றாக்குறையிருப்பின் பயிற்சிப் பட்டறையிலிருந்து சேர்ப்பித்துக் கொள்ளுங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழுக்களாய் அமைதியாய்க் கிளம்ப வேண்டும். இது மன்னரின் உத்தரவு. இதை மனதில் கொள்ளுங்கள். உங்களில் யாரும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். எந்த நேரம் வேண்டுமானாலும் அழைப்பு வரும் இங்கேயே இருங்கள். என்ன புரிந்ததா அனைவருக்கும்?" என்று விரைவாய்க் கூறி அதட்டலுடன் முடித்தார் தளபதி. "சரி இப்பொழுது கிளம்புங்கள்" என்றார். உபதளபதிகள் ஒவ்வொருவராய் உத்தரவு பெற்று வெளியேறினார்கள்.

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 03 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-03.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

Monday, September 10, 2018

Raja Rani | Naam Iruvar Namakku Iruvar - சிறப்பு மெகா வாரம்

Raja Rani | Naam Iruvar Namakku Iruvar - சிறப்பு மெகா வாரம் 

Raja Rani | Naam Iruvar Namakku Iruvar - சிறப்பு மெகா வாரம்
https://sigaram9.blogspot.com/2018/09/raja-rani-naam-iruvar-namakku-iruvar.html

Sunday, September 09, 2018

விநாயகர் சதூர்த்தி | 13.09.2018 | சிறப்புத் திரைப்படங்கள்

மாலை 04.00 - மனிதன் 

இரவு 07.00 - சிறுத்தை 

காலை 10.00 - நண்பேன்டா 

மதியம் 01.00 - திருடன் போலீஸ் 

மாலை 04.00 - வணக்கம் சென்னை 

இரவு 07.00 - உத்தம புத்திரன்  

விநாயகர் சதூர்த்தி | 13.09.2018 | சிறப்புத் திரைப்படங்கள் 
https://sigaram9.blogspot.com/2018/09/vinayagar-chathurthi-13-09-2018-special-films.html 
#tv #tamiltv #tamilfilms #tvprogrammes #tvschedule #ktv #suntv tamilhero #sigaram

Friday, September 07, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 02 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 

சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள். 

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 02 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா 
https://sigaram-one.blogspot.com/2018/09/Mudi-Meetta-Moovendhargal-02.html 
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

Thursday, September 06, 2018

அவளும் நானும் | சிறுகதை | கதிரவன்

ஒரு நாள் அவளா கூப்பிட்டு "அருண் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். அம்மா உன்னை கூட்டிட்டு கோயில் போயிட்டு வர சொன்னாங்க" என்றதும் மின்னலை விட வேகமாய் அவள் முன் தோன்றினேன். 

அவளோட விருப்பத்திற்கு கோயில் அப்புறம் என்னோட விருப்பத்திற்கு ஹோட்டல்ன்னு சுத்திட்டு நைட் ரூம்க்கு கூட்டிட்டு போய்விட்டேன். நாளுக்கு நாள் அவளை ஞாயிற்றுகிழமைகளில் வரவழைத்து தியேட்டர், பீச்சுன்னு போயிட்டு வந்தோம். இப்பவெல்லாம் அம்மாவின் அனுமதி தேவைப்படாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்குள் காதல் படர்வதை இருவரும் உணர்ந்தோம். 

எதிர்ப்பாராத தீண்டுதல்களில் விலகினோம். அடுத்த தீண்டலுக்காக காத்திருந்தோம். காதலை சொல்ல காதலர் தினத்தை பயன்படுத்தி கொண்டோம். தயக்கமே இல்லாமல் காதல் மலர்ந்தது. உரிமை கூடியது. சுதந்திர காதலை சுவாசித்தோம். 

அவளும் நானும் | சிறுகதை | கதிரவன் 
https://sigaram-one.blogspot.com/2018/09/avalum-naanum.html 
#தமிழ் #சிறுகதை #குடும்பம் #திருமணம் #காதல் #அன்பு #பிரிவு #உறவுகள் #உணர்வுகள் #சொந்தம் #இல்லறம் #மகிழ்ச்சி #சிகரம் 

Wednesday, September 05, 2018

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி

இந்தக் கதை நமது மனதில் சதா தோன்றிக் கொண்டிருக்கும் ஞாபகங்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. மனதில் ஆழப் பதிந்துவிட்ட எதையுமே இலகுவில் மறந்துவிட முடியாது. பல நாள் மறந்திருந்த ஒன்று மீண்டும் ஞாபகம் வரும்போது அது இரண்டு வகைகளில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 

ஒன்று அது சந்தோஷத்தை தரும். இல்லையேல் துக்கத்தை ஏற்படுத்தி உறங்க விடாமல் செய்யவும் கூடும். இந்த ஞாபகங்கள் தரும் அந்த இரண்டு விளைவுகளும் இந்தக் கதையில் சிலர் வாழ்வில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியதே இந்தக் கதை. ஞாபகம் வருகிறது... 

ஞாபகங்கள் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி 
https://sigaram-one.blogspot.com/2018/09/gnabagangal-chapter-01.html 
#ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம்