காலத்தால் கணிக்க இயலாத தொன்மை வாய்ந்த தமிழினம், பெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் படைத்து மொழியுடன் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வீரத்தையும் வளர்த்துக் கொண்டிருந்த காலத்தில் வேங்கட மலையை ஒட்டிய பகுதியை அரசாட்சி செய்த வம்சமொன்று பெரும் படையுடன் தொண்டை மண்டலத்தின் வழியே சோழ தேசத்தினுள் நுழைந்து சோழத்தைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வந்து, பின் பாண்டிய தேசத்தையும், சேர தேசத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் (கி.பி 250 முதல் கி.பி 575 வரை) முன்னூறு ஆண்டுகள் மூவேந்தர்களையும் அடக்கியாண்டு ஆளுமை செலுத்தி வந்தார்கள் களப்பிரர் எனும் ஓர் இனம்.
இவர்கள் யார்? இவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த போர்கள், அந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை, சமயநெறிகள், மன்னர்களின் ஆட்சி முறைகள் என எந்தத் தகவலும் பெருமளவு கிடைக்கப் பெறவில்லை.
சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், பெரிய புராணப் பாடல்கள் மூலம் மட்டுமே இவர்களின் தகவல்களை அறிய முடிகிறது.
அவ்வாறு கிடைத்த தகவல்களை வைத்தே தமிழ் நாட்டில் களப்பிரர்கள் ஆளுமை செலுத்தியதை ஆய்வு செய்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
அவர்களின் ஆய்வு நூல்களை அடிப்படையாய்க் கொண்டு நான் இத்தொடரை எழுதியுள்ளேன்.
இந்தத் தொடர் அக்கால நிகழ்வை ஓரளவேணும் உணர்த்தும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இனி பயணிப்போம்.
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 01 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா
https://sigaram-one.blogspot.com/2018/08/Mudi-Meetta-Moovendhargal-01.html
#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்